சவுதி பேரீத்தம் பழம் வரவில்லை ! முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி ..



ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு
தேவையான பேரீத்தம் பழங்கள் சவுதி அரசாங்கத்தினால் வருடா வருடம் நன்கொடையாக வழங்கப்பட்டு வந்தன.
இம்முறை சவுதி அரேபியாவினால் குறித்த பேரீத்தம் பழங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு முடியாமல் போயுள்ளது.

எனினும் தனிப்பட்ட மூன்று நன்கொடையாளர்களினால் இம்முறை 03 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்கள் 250 மெட்ரிக் தொன் தொகையினை சதோச நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சவுதி பேரீத்தம் பழம் வரவில்லை ! முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி ..  சவுதி பேரீத்தம் பழம் வரவில்லை !  முஸ்லிம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான மேலதிக பேரீத்தம் பழங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி .. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.