பாராளுமன்ற உறுப்பினராக VC இஸ்மாயில் ..?



அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கிஸ்தரும் ஐக்கிய தேசிய
கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான நவவி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அந்த வெற்றிடம் சம்மாந்துறை முன்னாள் தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் இஸ்மாயில் அவர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்படும் பட்சத்தில் அது சம்மாந்துறைக்கு கிடைக்கும் இரண்டாவது பாராளுமன்ற உறுப்புரிமையாகும்.

அதேபோல ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில்  ஹரீஸ் , பைஸல் காஸிம், மன்சூர்,  நஸீர்  ஆகியோருடன்  ஐந்தாவதாக மாவட்டத்தில் இணைந்துகொள்ளும் அதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமீர் அலி , ஹிஸ்புல்லாஹ் , அலிஸாஹிர் மவ்லானா திருகோணமலை மாவட்டத்தில் எம் எஸ் தவ்பீக், இம்ரான் மஹ்ரூப் , அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகிய  முஸ்லிம் எம்பிக்களுடன் 11 ஆவது எம் பியாக இணைந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற உறுப்பினராக VC இஸ்மாயில் ..? பாராளுமன்ற உறுப்பினராக VC இஸ்மாயில் ..? Reviewed by Madawala News on May 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.