உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய முதியோர் சங்கத்தினர். #சாய்ந்த்மருது.


எம்.வை.அமீர், யூ.கே.காலித்தீன்-
சாய்ந்த்மருதின் முதியோர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு நீண்டகாலமாக செயற்பாட்டு
வரும் தக்வா முதியோர் சங்கத்தினர் சங்க உறுப்பினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2018-05-15 ஆம் திகதி சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.சி.ஆதம்பாவா (கலிபா) தலைமையில் இடம்பெற்றது.

பொறுமதிவாய்ந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.நஜிமுதீன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எம்.பி.சம்சுடீன், சாய்ந்தமருது பிரதேச  சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆகமட் சபீர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.பஸீர் மற்றும் ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைத்தனர்.

‘ஹெல்ப் ஏச்’ உதவு நிறுவனத்தின் வழிகாட்டலில் இயங்கி வரும் சாய்ந்தமருது தக்வா முதியோர் சங்கம் பிரதேச முதியோர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய முதியோர் சங்கத்தினர். #சாய்ந்த்மருது. உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய முதியோர் சங்கத்தினர். #சாய்ந்த்மருது. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5