சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை.


சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள்
உயர்நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று (08-05-2018) உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு, முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா, வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சி, சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதா என்பதை ஆராயாமல், அரச சட்டத்தரணியின் வாதத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு நீதிபதி அந்த தீர்ப்பை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழ
சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை. சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்ய உயர்நீதிமன்றில் கோரிக்கை. Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5