சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகளுக்கு ஊழியர் கொடுத்த ஷாக்... #திருகோணமலை


(எம்.எப்.எம்.பஸீர்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த  விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென்பானம் கொண்டு வந்து தருமாறு விடுதியின் சேவையாளரிடம் தெரிவித்தனர்.

இதன்போது மென்பானத்துடன் குறித்த அறைக்கு சென்ற ஊழியர் அங்கு தனிமையிலிருந்த யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

இச் சம்பவத்தை அந்த யுவதிகள் இருவரும் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகளுக்கு ஊழியர் கொடுத்த ஷாக்... #திருகோணமலை சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகளுக்கு ஊழியர் கொடுத்த ஷாக்... #திருகோணமலை Reviewed by Madawala News on May 09, 2018 Rating: 5