கல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர்.


-பாறுக் ஷிஹான்-
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசியர்கள் தங்கியிருந்த வீட்டில் கல்வீச்சு சம்பவத்தை அடுத்து
அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இன்றைய தினம்(14) இடம்பெற்ற இச்சம்பவத்தினால் மாணவர்கள் பாடசாலைக்கு முன்பு காத்திருக்கின்ற பரிதாப நிலையை காண முடிந்தது.

தமக்கான உரிய பாதுகாப்பு கிடைக்கும் பட்சத்தில் வழமையாக பாடசாலைக்கு சென்று கற்பிக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலைமை காரணமாக பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை காண கூடியதாக உள்ளது.
கல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர். கல்வீச்சு சம்பவத்தை அடுத்து, அதிபர் உட்பட ஆசியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறினர். Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5