குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களோ முறையான முகாமைத்துவமோ இன்றி தற்போதைய அரசு அல்லற் படுகிறது ; மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கத் தேரர்-ஜே.எம்.ஹபீஸ்-
குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களோ முறையான முகாமைத்துவமோ
இன்றி தற்போதைய அரசு அல்லற் படுவதாக மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கத் தேரர் நியங்கொட விஜித்தசிரி தெரிவித்தார். (13.5.2018)

ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன (தாமரை மொட்டு) கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மல்வத்தை பீடத்திற்குச் சமுகமளித்து நலலாசி பெற்ற போதுஅவர் இதனைத் தெரிவித்தார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீ தலதா மாளிகை, கெட்டம்பே ராஜோபவனாராம விகாரையின் விகாராதிபதி கெப்பட்டியாகொடை சிரிவிமல தேரர், அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கத் தேரர் வரகாகொடை ஞானரத்ன தேரர், பதிவாளர் மெதகம தம்மாநந்த தேரர் ஆகியோர்களையு; சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொண்டார்.

மேற்படி சந்திப்பின் போது நியங்கொட விஜித்தசிரி தேரர் மேலும் கூறுகையில் தற்போதைய அரசிற்கு முறையான வேலைத்திட்டம் முகாமைத்துவம் என்பன இல்லாத காரணத்தால் நாடு பொருளாதார சரிவை நோக்கி நகர்வதாகக் கூறினார்.

குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களோ முறையான முகாமைத்துவமோ இன்றி தற்போதைய அரசு அல்லற் படுகிறது ; மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கத் தேரர் குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்களோ முறையான முகாமைத்துவமோ இன்றி தற்போதைய அரசு அல்லற் படுகிறது ; மல்வத்தைப் பிரிவின் அனுநாயக்கத் தேரர் Reviewed by Euro Fashions on May 14, 2018 Rating: 5