யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் கண்காட்சி. (படங்கள்)


பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று(13) ஞாயிற்றுக்கிழமை
முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்ற இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car வகையான கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் உடற்பயிற்சி செய்வதற்கான சிறிய நான்கு சில்லு சைக்கிள் போன்று ஓடும் வாகனமும், சிறிய மோட்டார் சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கார்கள் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் எம்.சரவணபவா ஐயரும்  அவரது குழுவினராலும் இவை ஒரு வருடமும் இரு மாதங்களும் தனது ஓய்வு நேரத்தினை ஒதுக்கி இவை உருவாக்கப்பட்டதாகும்

ஒவ்வொரு வாகனங்களையும் இவரது குடும்ப உறவினர்களின் பிள்ளைகள் செலுத்தி காட்டினர்.

இவற்றுக்கான சில இயந்திர பாகங்கள் ஐந்து சந்தி பழைய இரும்பு கடைகளில் பெற்று உருவாக்கப்பட்டுள்ளன.

இக் கண்காட்சியினை பார்வையிட சிறுவர்கள் பெரியவர்கள் என வருகை தந்து பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட கார்களின் கண்காட்சி. (படங்கள்) யாழ்ப்பாணத்தில்  தயாரிக்கப்பட்ட  கார்களின்  கண்காட்சி. (படங்கள்) Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5