இலங்கையில் விளையாட வந்த ஒரு பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு. மற்றவர் கவலைக்கிடமாக... காரணம் வெளியானது.


மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக நம்பப்பட்ட பிரித்தானிய ரக்பி வீரர் அதிகம் மதுபானம்
அருந்தியமையாலேயே உயிரிழந்துள்ளாரென ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரக்பி  போட்டிகளில் விளையாடுவதற்காக, இவர் உள்ளிட்ட 22 பேரைக் கொண்ட பிரித்தானியாவின் Clems Pirates Rugby குழுவானது கடந்த 10ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது.

நேற்று முன்தினம் ரக்பி போட்டிகள் நிறைவுற்ற பின்னர் குறித்த வீரர் இரவு நேர விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், உயிரிழந்த குறித்த வீரரும், மற்றுமொரு வீரரும் கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்று அதிகமாக மதுபானம் அருந்திய பின்னர், கோட்டையில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்துள்ளனர்.

நேற்று அதிகாலை குறித்த இரு வீரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டவுடன், இருவரும் ஹோட்டல் முகாமையாளரால் தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 26 வயதான ரக்பி வீரர் உயிரிழந்துள்ளதுடன், 27 வயதான மற்றைய வீரரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த இரு வீரர்களும் அருந்திய மதுபானம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

உயிரிழந்த வீரரின் பிரேத பரிசோதனைகள் வடக்கு அயர்லாந்தில் உள்ள அவரது உறவினர்கள் இலங்கைக்கு வந்த பின்னர் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விளையாட வந்த ஒரு பிரித்தானிய ரக்பி வீரர் உயிரிழப்பு. மற்றவர் கவலைக்கிடமாக... காரணம் வெளியானது. இலங்கையில் விளையாட வந்த ஒரு பிரித்தானிய ரக்பி வீரர்  உயிரிழப்பு. மற்றவர் கவலைக்கிடமாக... காரணம் வெளியானது. Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5