இராணுவ வேலை என்பதும் ஓர் அரச வேலைதான் - யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி. Aq


யாழிலிருந்துபைஷல் இஸ்மாயில்
இராணுவ வேலை என்பதும் ஓர் அரச
வேலைதான் இதில் வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து எமது நாட்டுக்குச் சேவையாற்ற முன்வரவேண்டும் என்று யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


யாழ் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் (12) சிங்கள டிப்ளோமாக் கற்கை நெறியை புர்த்தி செய்த 600 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், 100 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள். நல்லவர்கள். எனினும் கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்றுப் பிரித்து விட்டது. தெற்குச் சிங்கள மக்கள் வடக்குத் தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொங்டவர்களாகவே இருக்கிறார்கள்

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில்கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள். ஆனால் இராணுவ வேலையும் ஓர் அரச வேலைதான் இராணுவத்தை சிங்கள இராணுவம் என எண்ணாதீர்கள். இதில் மூவ்வின மக்களும் உள்ளார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

தற்போதைய இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கம் நான் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன் இராணுவ வேலையும் ஓர் அரச வேலைதான் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு இதில் இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்துகொண்டு எமது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகச் சிறந்த சேவையாற்ற முன்வரவேண்டும் என்றார்
இராணுவ வேலை என்பதும் ஓர் அரச வேலைதான் - யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி. Aq இராணுவ வேலை என்பதும் ஓர் அரச வேலைதான் - யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி. Aq Reviewed by Euro Fashions on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.