மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்க, கொழும்பில் நடைபெற்றது பலஸ்தீன “நக்பா” தின நிகழ்வு.


பலஸ்தீன மக்களின் வெளியேற்றத்தைக் குறிக்கும் “நக்பா” தினத்தை முன்னிட்டு ஏற்பாடு
செய்யப்பட்ட பேரணி இன்று காலை கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகம் முன்னாலிருந்து நடைபெற்ற குறித்த பேரணியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் பேரணி ஹோர்ட்டன் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ் மற்றும் காலி முகத்திடல் வழியாகச் சென்று மீண்டும் பலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்தது.


இந்த நிகழ்வில் டுபாய், துருக்கி மற்றும் ஓமான் நாட்டு இலங்கைக்கான தூதுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை இந்நிகழ்வுடன் இணைத்தாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நக்பா” தின சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சிறப்புரையாற்றவுள்ளார்.

பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை குழுவும் கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகமும் இணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்க, கொழும்பில் நடைபெற்றது பலஸ்தீன “நக்பா” தின நிகழ்வு. மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைக்க,  கொழும்பில் நடைபெற்றது  பலஸ்தீன  “நக்பா” தின நிகழ்வு. Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.