(படங்கள்) காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பலத்த மழை. பல பகுதிகள் நீரில் மூழ்கின.


​காலி மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் மழையினால்,
வௌ்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில்,கன மழை பெய்ததாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி உதவிப் பணிப்பாளர், லெப்டினன் கேணல், தம்பத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தாழ்நில பிரதேசங்களில் வௌ்ள நீர் வடிந்து வருவதாகவும் இதனால் நதிகளின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சுமார் 8500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(படங்கள்) காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பலத்த மழை. பல பகுதிகள் நீரில் மூழ்கின. (படங்கள்) காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பலத்த மழை. பல பகுதிகள் நீரில் மூழ்கின. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5