7ஆவது வருடமாக வெளியிடப் படுகின்றது ரமழான் சுய மதிப்பீட்டு அட்டவணை.



எம்மை எதிர் நோக்கி வரும் ரமழானை உயிரோட்டமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும்
மாற்றி அமைத்து அள்ளாஹ்வின் உதவிகளை பெற்றுக் கொள்ள  தொடராக 07ஆவது வருடம் (ஹிஜ்ரி 1439)  உங்களுக்காக வடிவமைக்க பட்டுள்ள  ரமழான் சுய மதிப்பீட்டு அட்டவணை இதோ  வெளிவந்து விட்டது. ( கடந்த 07 வருடங்களாக குறித்த அட்டவணையை UK யிலும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் விநியோகித்து பரீட்சிக்க பட்ட  வகையில் அல்லாஹ்வின் உதவியால் பல்லாயிரம்  மக்கள் இதன் மூலம் பயனடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.


முழு ரமழானிலும் எமது பர்ழான நபிலான வணக்கங்களை  ஆர்வத்துடன் புரிவதற்காக, அன்றாட செயற்பாடுகளை பயனுள்ளவைகளாக மாற்றிக் கொள்ள, உளத் தூய்மையை ஏற்படுத்திக் கொள்ள, அள்ளாஹ்விற்கும் அடியார்களுக்கும் இடையிலான கடமைகள், மனிதன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என  இஸ்லாம் வலியுறுத்தும் அனைத்து பகுதிகளிலும் எமது செயற்பாடுகளை சுய மதிப்பீடு செய்து கொள்ள சுருக்கமாகவும்  செயற்படுத்துவதற்கு இலகுவாகவும் வடிவமைக்க பட்டுள்ள  குறித்த அட்டவணைகளாவன பெரியவர்களுக்காக தமிழ் ஆங்கிலம் என இரு   மொழிகளிலும், சிறார்களுக்காக ஆங்கிலத்திலும் தயார் படுத்த பட்டுள்ளன.  


குறித்த கீழுள்ள  அட்டவணைகளை  Download (பதிவிறக்கம்)  செய்து கொண்ட பின் இணைக்க பட்டுள்ள,  03 பக்கங்களைக் கொண்ட, உங்களுக்கு பொருத்தமான மொழியில் உள்ள அட்டவணையை Print எடுத்து ரமழானின் ஒவ்வொரு  தினத்திலும் உங்கள் இபாதாத்துகளும் செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கின்றன என்பதை கவனமாக குறித்து வாருங்கள். இதை ஆரம்பித்து விடுவீர்களென்றால் நீங்கள் அறியாமலேயே  இது உங்களை நிச்சயம் நற் செயல்களின் பக்கம் தூண்டிக் கொண்டே இருக்கும் இன்ஷா அள்ளாஹ். (கூடுதலாக Prints  எடுத்து உங்கள் பள்ளிவாசல் ஊடாக உங்கள் ஊர் ஜமாஅத்தினர் மற்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்து கூடுதல் நன்மைகளை பெற்றுக் கொள்ள முயட்சி செய்யுங்கள்)    
குறிப்பு:

குறித்த அட்டவணைகளாவன கடந்த 07 வருட காலமாக  தேவைக்கேற்ப சில மாற்றங்களுடன் 06 இற்கு மேற்பட்ட நாடுகளில்  எம்மவர்களால் விநியோகிக்க பட்டு வரும் அதே வேலை  தனிப்பட்ட முறையில் அனுமதி பெற்ற பலரும் கடந்த வருடங்களில் குறித்த அட்டவணைகளை தத்தம் பகுதி மக்களுக்கு இடையிலும் பள்ளிவாசல்கள் ஊடாகவும் விநியோகித்திருந்தனர். வேறு சிலர் அட்டவணைகளில் பெயர் மற்றும் விலாசங்களை கூட  மாற்றியும் சிலர் அனுமதி பெறாமலேயே மாற்றங்களை செய்தும் கடந்த காலங்களில் விநியோகித்திருந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். ஆகவே இஸ்லாம் அனுமதிக்காத குறித்த செயலில் ஈடுபடுவதை தவிர்த்து இருப்பதை அப்படியே பிரதி எடுத்து விநியோகிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்.


 குறித்த அட்டவணைகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சென்றடைவதில் கடந்த 07 வருடங்களாக அவற்றை தொடராக தமது சமூக வலைத்தளங்களுக்கூடாக வெளியிட்டு வரும் மக்களின் அபிமானத்தை வென்ற மடவளை நியூஸ் மற்றும் ஜப்னா முஸ்லிம் ஆகிய இரு இணைய தளங்களிற்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

Download லிங்க் :
Ramalaan Chart tamil v5 Alhiadya

Ramalaan Chart Children v5 Alhidaya

Ramalaan Chart English v5 Alhidaya


ஜஸாக்குமுள்ளாஹு ஹைரல் ஜஸாஃ. 
அன்புடன் 
அஷ் ஷெய்க், அல் ஹாபிள் M Z M ஷfபீக்.
7ஆவது வருடமாக வெளியிடப் படுகின்றது ரமழான் சுய மதிப்பீட்டு அட்டவணை. 7ஆவது  வருடமாக  வெளியிடப் படுகின்றது  ரமழான் சுய மதிப்பீட்டு அட்டவணை. Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.