ஏனைய சமுகத்தினர்களுக்கு இது முன்னுதாரணமாகும்... முஸ்லீம் மகளிர் கல்லூரி 8 மாடி கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் புகழாரம்.


(அஷ்ரப் ஏ சமத்)
இந்த நாட்டில் உள்ள அரச பாடசாலைகளுல் கொழும்பு முஸ்லீம் மகளிர்  கல்லூரியின் அருகாமையில் தனியார் காணியைப் பெற்று ஒர் உயர்ந்த கட்டடம் (8 மாடிகள்) உள்ள ஒரே ஒரு பாடசாலை முஸ்லீம் மகளிர் கல்லூரி  மட்டுமேயாகும் கொழும்பில் வாழும்  முஸ்லீம் சமுகத்தின் மகளிரத்ய்  கல்விக்காக  இவ்வாறு உதவிசெய்த நன்கொடையாளகள் நான் பாராட்டுதலும் நன்றியையும் தெரிவிப்பதோடு  இப் பாடசாலைக்காக இவ்வாறு உதவி செய்வது ஏனைய சமுகத்தினர்களுக்கு  ஒரு முன் உதாரணமாகும். என பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று முன்தினம் 13 பம்பலப்பிட்டியில் உள்ள முஸ்லீம் மகளிர்  கல்லூரியின் 8 மாடிகளைக் கொண்ட கட்டடித்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே  பிரதமர் ரணில் விக்கிரமசிஙக் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

இந் நிகழ்வு மகளிர்  கல்லூரியின் அதிபர்  ரஸ்மியா அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது இராஜாங்க அமைச்சர்  ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்க்ஃஅல்  முஜிபு ரஹ்மான், எஸ்.எம் மரிக்கார், மலேசியா நாட்டுக்கான தூதுவர்  ஏ.ஜே.எம். முசம்மில், பழைய மாணவிகள் சங்கத்தின் உபதலைவர்  பேரோசா முசம்மில் கட்டிடத்திற்காக நன்கொடை வழங்கிய  இல்யாஸ் அப்துல் கரீம், அசாத் சாலி உட்பட மகளிர்  கல்லூரியின் பெற்றோர் அபிவிருத்திக் குழு  மாணவதலைவர்கள்,  முன்னாள் அதிபர்கள் ஆசிரியைகள் மற்றும்  பழைய மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இக் கட்டிடம் 8 மாடிகளைக் கொண்டது. உயர்தர மாணவிகளுக்காக 35 வகுப்பறைகள், உயர்த்தி , நுாலகம், ஆய்வுகூடம், கூட்ட மண்டபம், கிழ் தரைகளில் வாகனத் தடிப்பிடம் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த  மகளிர்  கல்லூரியின் ஆரம்ப நிகழ்வும் 2 மாடிகளை நிர்மாணிப்பதற்கும் டொக்டர் பஸ்லி நிசார் ஆரம்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

அதனைத் தொடா்ந்து 8 மாடிவரை மெலிபன் காமான்ட் உரிமையாளர் இல்யாஸ் அப்துல் கரிம் உதவியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



ஏனைய சமுகத்தினர்களுக்கு இது முன்னுதாரணமாகும்... முஸ்லீம் மகளிர் கல்லூரி 8 மாடி கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் புகழாரம். ஏனைய சமுகத்தினர்களுக்கு இது முன்னுதாரணமாகும்... முஸ்லீம் மகளிர் கல்லூரி  8 மாடி கட்டிடத்தை திறந்து வைத்து பிரதமர் புகழாரம். Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.