அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன களமிறங்கினால், வெறும் 5 சதவீத வாக்குகளையே பெறுவார்.


 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கினால், 5 சதவீத வாக்குகளையே பெறுவார் என்று  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பிரிஸ் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின்படி, எமது நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிகளில் எவரும் பெற்றிராத தோல்வியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புஞ்சி பொரளையில் உள்ள வஜிராசிரம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றியப்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன களமிறங்கினால், வெறும் 5 சதவீத வாக்குகளையே பெறுவார். அடுத்த  தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும்  மைத்திரிபால சிறிசேன களமிறங்கினால், வெறும் 5 சதவீத வாக்குகளையே பெறுவார். Reviewed by Madawala News on May 08, 2018 Rating: 5