பௌத்த பிக்குகள் 30 பேர் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதி


உணவு விஷமாகியதன் காரணமாக பௌத்த பிக்குகள் 30 பேர் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கெகிராவை - பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பிக்குகள் கல்வி கற்கும் இடத்தில் உணவு உட்கொண்ட சிலரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கெகிராவை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் 30 பேர் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதி பௌத்த பிக்குகள் 30 பேர் உள்ளிட்ட 46 பேர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5