ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது.


(எம்.எம்.மின்ஹாஜ்)
ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான
பொரு­ளா­தார சூழ­லுக்கு மத்­தி­யி­லேயே நாம் பய­ணித்து கொண்­டுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கிரா­மத்தை அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது. விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு உலக வங்­கியின் ஒத்­து­ழைப்­புடன் உள்­நாட்டு தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுடன் நேற்று முன் தினம் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வு நேற்று முன் தினம் பத்­த­ர­முல்லை வோர்டர்ஸ் ஹெஜ் ஹோட்­டலில் நடை­பெற்ற போது பிர­தம அதி­தி­யாக வந்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

கிராம அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினால் மாத்­தி­ரமே நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடியும். தற்­போது கிராம பொரு­ளா­தாரம் வீழ்ச்சி அடைந்­துள்­ளது. விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். தற்­போது விவ­சா­ய­து­றையில் இளை­ஞர்கள் தூர­மாகி வரு­கின்­றனர். ஆகையால் விவ­சா­யத்­து­றையை நவீ­ன­ம­யப்­ப­டுத்த வேண்டும்.

விவ­சா­யத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு 102 மில்­லியன் டொலரை உலக வங்கி அன்­ப­ளிப்பு செய்­துள்­ளது. அமெ­ரிக்கா, சீனா, தாய்­லாந்து ஆகிய நாடு­களில் விவ­சா­யத்­துறை நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வதின் ஊடாக விவ­சா­யத்­து­றையின் உற்­பத்தி அதி­க­ரிப்­ப­துடன் தரமும் அதி­க­ரிக்கும். எனினும் தென்­ஆ­சி­யாவில் இந்த நிலைமை இன்னும் ஏற்­ப­ட­வில்லை.

இலங்­கையின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் விவ­சா­யத்­துறை நவீ­ன­ம­யப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். மீன்­பிடி மற்றும் விவ­சா­யத்­து­றை­யினால் கிடைக்கும் வரு­மா­னத்தை நாம் அதி­க­ரிக்க வேண்டும். விவ­சாய உற்­பத்தி தரம் அதி­க­ரிக்கும் போது கிராம பொரு­ளா­தா­ரமும் பலம்­பெரும். ஆகவே கிராம பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் திட்­டத்தை நாம் ஆரம்­பித்­துள்ளோம்.

 கடந்த வரு­டத்தில் நாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் அதி­க­ரித்­தது. அது­மாத்­தி­ர­மின்றி வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக வெளி­நாட்டு முத­லீடும் கடந்த வருடம் அதி­க­மாக பதி­வா­னது. இந்­நி­லையில் நாம் கடன் செலுத்தும் நிலை­மைக்கு பொரு­ளா­தா­ரத்தை கொண்டு வந்துள்ளோம்.

இதன்படி ஒரு வருடத்திற்கு நாம் 2500 மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பொருளாதார சூழலுக்கு மத்தியிலேயே நாம் பயணித்து கொண்டுள்ளோம். ஆகவே விவசாயத்துறையை நவீனமயப்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்

ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஒரு வரு­டத்­திற்கு நாம் 2500 மில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. Reviewed by Madawala News on May 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.