இன்னும் மூன்று தினங்­களில் 250 மெட்­ரிக்தொன் பேரீச்­சம்­பழம் இலவசமாக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேர­டி­யா­கவே விநி­யோ­கிக்­கப்­படும்.


முஸ்­லிம்­களின் நோன்பு கால பாவ­னைக்­காக எதிர்­வரும் மூன்று தினங்­களில் 250 மெட்­ரிக்தொன்
பேரீச்­சம்­ப­ழங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் சதொச நிறு­வ­னமும் இணைந்து மேற்­கொண்­டுள்­ளன.

பேரீச்­சம்­ப­ழங்கள் முஸ்லிம் சமய  விவ­கார அமைச்சு வழங்­கி­யுள்ள பட்­டி­ய­லுக்கு அமை­வாக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சதொச நிறு­வ­னத்தால் நேர­டி­யாக விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளன.

நோன்பு இன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கு உட­ன­டி­யாக பேரீச்­சம்­பழம் விநி­யோ­கிக்க வேண்­டி­யுள்­ளதால் சதொச நிறு­வனம் உள்ளூர் சந்­தை­யி­லி­ருந்தே இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பேரீச்­சம்­ப­ழங்­களைக் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு இல­வ­ச­மாக பேரீச்­சம்­பழம் வழங்க அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள நிலையில் பேரீச்­சம்­பழம் விநி­யோகம் தொடர்பில் சதொச நிறு­வ­னத்தின் தலைவர் மொஹமட் ரிஸ்வான்  பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்தார்.

250 மெட்­றிக்தொன் பேரீச்­சம்­ப­ழத்தை கொள்­வ­னவு செய்­வ­தற்கு சதொச நிறு­வ­னத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

நோன்பு ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டதால் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து பேரீச்­சம்­பழம் இறக்­கு­ம­தி­செய்து விநி­யோ­கிப்­ப­தென்றால் நீண்­ட­காலம் எடுக்கும். நோன்பு காலத்­துக்குள் இறக்­கு­மதி செய்­து­கொள்ள முடி­யுமா என்­பது சந்­தே­கமே.

இதனால் உள்ளூர் சந்­தையில் தற்­போது கையி­ருப்­பி­லுள்ள இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பேரீச்­சம்­பழம் 250 மெட்­றிக்தொன் கொள்­வ­னவு செய்து விநி­யோ­கிப்­பது எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதற்­கென கேள்­விப்­பத்­திரம் கோரப்­பட்டு பேரீச்­சம்­பழ மாதி­ரிகள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு அவற்றின் தரம் பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, பாவ­னை­யாளர் அதி­கார சபை, சதொச நிறு­வன அதி­கா­ரிகள் குழு பேரீச்­சம்­பழ மாதி­ரி­களை ஆராய்ந்து அனு­ம­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்கள். அதன் அடிப்­ப­டையில் உள்ளூர் சந்­தையில் தர­மான பேரீச்­சம்­ப­ழங்கள் கொள்­வ­னவு செய்­யப்­ப­ட­வுள்­ளன.

இன்னும் மூன்று தினங்­களில் பேரீச்­சம்­பழம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேர­டி­யா­கவே விநி­யோ­கிக்­கப்­படும். விநி­யோகம் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு வழங்­கி­யுள்ள பள்­ளி­வா­சல்­களின் பெயர் பட்­டி­ய­லின்­ப­டியே இடம்­பெறும் என்றார்.

சவூதி அரே­பியா அர­சாங்கம் வரு­டாந்தம் புனித நோன்பு அன்­ப­ளிப்­பாக பேரீச்­சம்­ப­ழங்­களை இல­வ­ச­மாக வழங்கி வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஆனால் இவ்­வ­ருடம் சவூ­தியின் அன்­ப­ளிப்பு வழங்­கப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்பே பேரீச்சம் பழங்­களை கால­தா­ம­த­மின்றி வழங்­கு­மாறு சவூதி அரே­பி­யாவை கடிதம் மூலம் கோரி­யி­ருந்தும் அது வழங்­கப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்தே பேரீச்­சம்­பழம்  கொள்­வ­னவு செய்­யப்­பட்டு இல­வ­ச­மாக விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கடந்த வருடம் சவூதி அர­சாங்கம் 150 மெட்­றிக்தொன் பேரீச்­சம்­ப­ழங்­களை இலங்­கைக்கு இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் கலந்துரையாடியதன் பின் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைப்பத்திரம் ஒன்றினைச் சமர்ப்பித்து 250 மெற்றிக்தொன் பேரீச்சம்பழம் கொள்வனவு  செய்வதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

- விடிவெள்ளி-
இன்னும் மூன்று தினங்­களில் 250 மெட்­ரிக்தொன் பேரீச்­சம்­பழம் இலவசமாக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேர­டி­யா­கவே விநி­யோ­கிக்­கப்­படும். இன்னும் மூன்று தினங்­களில் 250 மெட்­ரிக்தொன்  பேரீச்­சம்­பழம் இலவசமாக பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேர­டி­யா­கவே விநி­யோ­கிக்­கப்­படும். Reviewed by Madawala News on May 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.