கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் 24 மணிநேர நீர்வெட்டுகண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பகிர்ந்தளிக்கப்படும் மின்சார திட்டத்தில் புனரமைப்பு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
இதனால் கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 24 மணிநேர நீர்வெட்டு அமுலாகும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


ஹாரிஸ்பத்துவ, அக்குரணை, ஹலல, கஹவத்தை, குருகொட, தெலுங்குஹாவத்தை, நுகவெல, பரிகம, ஹேதெனிய, மெதவல, பூஜாபிட்டிய, கொஹாகொட, கண்டி மாநகர சபைக்கு உட்பட்ட அஸ்கிரிய நீர்த் தாங்கி மூலம் நீர் விநியோகம் இடம்பெறும் பகுதி ஆகிய இடங்களுக்கான நீர்விநியோகம் இதனால் தடைப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் 24 மணிநேர நீர்வெட்டு கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் 24 மணிநேர நீர்வெட்டு Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5