இலங்கைக்கு வரும் அரபு நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ..அண்மையில் டுபாயில் நடைபெற்ற 24 ஆவது அரேபிய பயணச் சந்தையில் (ATM Arabian Travel Market)
இலங்கை சிறந்த விடுமுறைகால சுற்றுலாத் தளமாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு மத்திய கிழக்கு அரபுகளை ஈர்க்கும் வகையில் 03 தெருவோரக் கண்காட்சிகள் டுபாயில் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர வர்த்தகங்களுக்கிடையிலான (B2B) சந்திப்புக்கள் பலவும் நடைபெற்றுள்ளன.
சுற்றுலா மேம்படுத்தலுக்கான இந்தச் செயற்பாடுகளில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்து கொண்டார். கடந்த காலங்களில் இலங்கையின் சுற்றுலாத் துறையில் மத்திய கிழக்கு அரபுகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டி வருகிறது. 2018 மார்ச் மாதத்தில் மட்டும் 15,894 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் அரபு நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ..  இலங்கைக்கு வரும் அரபு நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு .. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5