2019 இல் நாட்டின் பொரு­ளா­தாரம் சாத­க­மான நிலை­மைக்கு வந்துடும்.


(எம்.எம்.மின்ஹாஜ்)
வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக கடந்த வரு­டமே 1900 மில்­லியன் டொலர்
வெளி­நாட்டு முத­லீ­டுகள் இலங்­கைக்கு கிடைக்­க­பெற்­றன. நடப்­பாண்டில் ஏற்­று­ம­தியும் முத­லீ­டு­களும் கடந்த வரு­டத்தை விட இன்னும் அதி­க­ரிக்கும். 2019 ஆம் ஆண்டின் போது சாத­க­மான பொரு­ளா­தா­ரத்தை நாட்டில் உரு­வாக்­குவோம்.


அனர்த்­தங்­க­ளுக்கு மத்­தியில் கடனை செலுத்தி கொண்டு நாம் பொரு­ளா­தா­ரத்தை வீழ்த்­தாமல் சாத­க­மான நிலை­மை­யி­லேயே வைத்­துள்ளோம். இதன்­பி­ர­காரம் அபி­வி­ருத்­தியை மைய­மாக கொண்டு புதி­தாக அபி­வி­ருத்தி வங்­கி­யொன்றை ஸ்தாபிக்­க­வுள்ளோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.


அடுத்த இரண்டு வரு­டங்­களில் அம்­பாந்­தோட்­டை­யையும் சேர்த்து நான்கு முத­லீட்டு வல­யங்­களை உரு­வாக்கி அதி­க­ள­வி­லான தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­குவோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அரச முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்கள் 4500 பேருக்கு நிய­மனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அரச முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­கப்­பட்­டது. மக்­களின் சேவையை மையப்­ப­டுத்தி அரச சேவையில் பலர் இணைக்­கப்­ப­டு­கின்­றனர். அரச முகா­மைத்­து­வத்தின் ஊடாக மக்­க­ளுக்கு சேவை செய்ய வேண்டும். அரச முகா­மைத்­துவம் என்­பது ஆட்­சி­யா­ளர்­களின் முகா­மைத்­துவம் அல்ல. அர­சாங்க இயந்­தி­ர­மல்ல. அரச முகா­மைத்­துவம் மாற்று துறை­யாக இயங்­கு­கின்­றது.


நாட்டில் தொழில் வாய்ப்­பு­களை பெறவே பலரும் எதிர்­பார்த்து இருந்­தனர். தற்­போது ஒரு சில­ருக்கு அந்த வாய்ப்­புகள் கிடைத்­துள்­ளன. இன்னும் ஒரு தரப்­பினர் தொழி­லின்றி உள்­ளனர். நாம் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்டும். அனை­வ­ருக்கும் அர­சாங்க தொழில் வாய்ப்­பு­களை வழங்க முடி­யாது. எந்­த­வொரு நாட்­டிலும் அனை­வ­ருக்கும் அர­சாங்க தொழில் வழங்கும் முறைமை கிடை­யாது. ஐக்­கிய அமெ­ரிக்­காவை எடுத்­துக்­கொண்டால் அதி­க­ள­வி­லானோர் தனியார் துறை­யி­லேயே சேவை புரி­கின்­றனர்.
அது­மாத்­தி­ர­மின்றி சோச­லிஷ கொள்­கையை கடை­பி­டிக்கும் சீனா உள்­ளிட்ட சில நாடு­க­ளிலும் அர­சாங்க சேவை­யையும் பார்க்க தனியார் துறையின் பங்­க­ளிப்பே அதி­க­மாக உள்­ளது. ஆகவே அர­சாங்க தொழி­லை­வி­டவும் தனியார் தொழில் துறையை நாம் ஊக்­க­விக்க வேண்டும்.


அர­சியல் முறைமை எது­வாக இருந்­தாலும் அமெ­ரிக்­காவில் தனியார் துறையின் பங்­க­ளிப்பே அதி­க­மாக உள்­ளது. அமெ­ரிக்­காவில் அர­சாங்க சேவையில் பாது­காப்பு துறை­யி­னரே அதி­க­மாக உள்­ளனர். தனியார் துறையின் பங்­க­ளிப்பை அதி­க­ரித்து ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்டும். தனியார் துறையின் புதிய தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்டும். மேலும் சுய­தொழில், விவ­சா­யத்தில் ஈடுப்­பட்­டுள்­ளோ­ருக்கு நாம் சலு­கை­களை வழங்க வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் யுகத்தை மீண்டும் ஏற்­ப­டுத்த வேண்டும்.


யுத்­தத்தின் பின்னர் போது­மான அளவு முத­லீ­டுகள் கிடைக்­க­வில்லை. கடன் செலுத்­து­வதே நோக்­க­மாக இருந்­தது. கடன் செலுத்த தகு­தி­யான உறு­தி­யான இடத்­திற்கே அதி­க­ள­வி­லான முத­லீ­டுகள் வரும். 2015 ஆம் ஆண்டு கடன் செலுத்­து­வ­தற்கு வரு­மானம் போதாது. எனினும் தற்­போது நாம் கடனை செலுத்தி வரு­கின்றோம். அதற்கு அப்பால் வரு­மா­னத்தை அதி­க­ரித்து வரு­கின்றோம். இது இல­கு­வான காரி­ய­மல்ல. ஒவ்­வொரு வரு­டமும் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. கடந்த வரு­டமே 1900 மில்­லியன் டொலர் முத­லீடு கிடைத்­தது. இது வர­லாற்று சாத­னை­யாகும். எனினும் இதுதான் ஆரம்­ப­மாகும். இந்த தொகையை கொண்டு நான் திருப்திக் கொள்ள மாட்டேன்.


 இந்த தொகையை இன்னும் அதி­க­ரிக்க வேண்டும். எனினும் இலங்கை வர­லாற்றில் அதி­க­ள­வி­லான வெளி­நாட்டு முத­லீ­டுகள் கடந்த வரு­டமே கிடைத்­தன என்­ப­தனை எண்ணும் போது திருப்­தி­யாக உள்­ளது. அதே­போன்று நாட்டின் ஏற்­று­மதி வரு­மா­னமும் கடந்த வருடம் பெரு­ம­ளவு அதி­க­ரித்­தது.


அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை குத்­த­கைக்கு வழங்­கிய தொகையை தவிர்த்தே வெளி­நாட்டு முத­லீ­டாக 1900 மில்­லியன் டொலர் முத­லீடு கிடைக்­க­பெற்­றுள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முகம் தொடர்­பான முத­லீடும் கிடைக்கும் போது இன்னும் முத­லீட்டு தொகை அதி­க­ரிக்கும். ஆகவே இவ்­வ­ருடம் கடந்த வரு­டத்­தையும் விஞ்­சிய வெளி­நாட்டு முத­லீட்­டையும் ஏற்­று­மதி வரு­மா­னத்­தையும் நாம் எதிர்­பார்க்­கின்றோம்.


உற்­பத்தி துறை, சுற்­றுலா துறையின் ஊடாக அதி­க­ள­வி­லான முத­லீ­டுகள் கிடைக்க பெறும். பொரு­ளா­தார வளர்ச்சி வீதமும் அதி­க­ரிக்கும். எனினும் கடந்த வரு­டத்தை போன்று வரட்சி, வெள்­ள­பெ­ருக்கு போன்ற இயற்கை அனர்த்­தங்கள் இல்­லா­மை­யினால் சாத­க­மான நிலை­மையை எம்மால் எதிர்­பார்க்க முடியும். 2019 ஆம் ஆண்டு ஆகும் போது பொரு­ளா­தா­ரத்தில் நல்ல நிலை­மைக்கு எம்மால் வர­மு­டியும். ஏற்­று­ம­தி­யையும் முத­லீ­டு­க­ளையும் நாம் அதி­க­ரிப்போம்.


அம்­பாந்­தோட்டை தவிர்த்து களுத்­துறை, வெலி­கம, பிங்­கி­ரிய ஆகிய பகு­தி­களில் முத­லீட்டு வல­யங்கள் மூன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். சுற்­றுலா வலயம் மூன்றை ஆரம்­பிக்­க­வுள்ளோம். அடுத்த இரண்டு வரு­டங்­களில் அம்­பாந்­தோட்டை வல­யத்­தையும் சேர்த்து நான்கு முத­லீட்டு வல­யங்­களை உரு­வாக்­குவோம். 1977 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யி­லேயே மூன்று முத­லீட்டு வல­யங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­பின்னர் முத­லீட்டு வலயங்கள் போதுமான அளவு உருவாக்கப்படவில்லை.


நாம் நாட்டை பொறுப்பேற்று பல்வேறு அனர்த்தங்களுக்கு மத்தியிலும் கடன் செலுத்தியும் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்தோம். அதனால் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை. தற்போது வரைக்கும் சாதகமான நிலைமையிலேயே உள்ளது.


சிறுத்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மை கருதி வங்கிகளுக்கு மூலதன நிதி வழங்கி பொருளாதார துறை மேம்படுத்துவோம். மேலும் புதிதாக அபிவிருத்தி வங்கியொன்றையும் ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.

2019 இல் நாட்டின் பொரு­ளா­தாரம் சாத­க­மான நிலை­மைக்கு வந்துடும். 2019 இல் நாட்டின் பொரு­ளா­தாரம் சாத­க­மான நிலை­மைக்கு வந்துடும். Reviewed by Madawala News on May 15, 2018 Rating: 5