மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



இலங்கை நாட்டின் ஆலிம்களின் திறன்களை வளர்த்து அவர்களை நாளைய தலை சிறந்த தலைவர்களாக
மாற்ற வேண்டும் எனும் நோக்கில் 2016.07.27 அன்று ஆரம்பிக்கப்பட்ட வத்தளை மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2018.05.13 அன்று ரோஸ்விலா கார்டின் மஸ்ஜிதுல் பிர்வ்தஸில் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டார்கள். 21 உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் இருந்து 350 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்று வரும் இந்நிறுவனம் ஆலிம்களின் திறன்களை வளர்க்க என அல்குர்ஆனின் சட்ட திட்டங்கள் மகாஸிதுஸ் ஷரீஆ ஆங்கிலம் சிங்களம் தமிழ்இ அரபு ஆகிய மொழிகளையும் இஸ்லாமிய வங்கி முறை உளவியல் பொருளாதாரம் அரசியல் சட்டவியல் தொழில் வழிகாட்டல் கற்கை கணணிக் கல்வி இஸ்லாமிய வராலாறு உலக வரலாறு என பல துறைகளினதும் அடிப்படைகளை போதித்து வருகின்றது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு  மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.