2015 ஆம் ஆண்டு (உ/த) பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள்.


2015 ஆம் ஆண்டு கா.போ.த (உ/த) பரீட்சைக்கு தோன்றிய மாணவர்களுக்கு தேசிய கல்வியற்கல்லூரிகளுக்கு
நேர்முகப்பரீட்சை இடம்பெற்றது. தற்போது ஜூன் 5,6 ஆம் திகதிகளில் அவர்களுக்கான பதிவு இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியையற்கல்லூரிக்கு தெரிவாகியவர்களுக்கு கடிதங்கள் கிடைக்காவிட்டால் தெரிவு செய்யப்படவிருக்கும் கல்லூரிகளுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி விசாரிக்க முடியும்

2015ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் இம்முறை மூன்று மடங்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

நாடு முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியற் கல்லூரி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சை கல்விபீடங்களின் மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ளன.

இம்மாதம் முடிவடைய முன்னர் கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்தார்.

நேர்முகப்பரீட்சைக்காக இதுவரையில் கடிதங்கள் கிடைக்கப்பெறாதோர் 011 2784818 மற்றும் 0112 784816 என்ற தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்புகொண்டு அது தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ளமுடியும்.

இவர்களின் தகுதிக்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

எம் எம் எம் நுஸ்ஸாக்







2015 ஆம் ஆண்டு (உ/த) பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள். 2015 ஆம் ஆண்டு (உ/த) பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள். Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.