கண்டி வன்செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு 2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்செயல்களால்  பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக
சலுகை வட்டி வீதத்தில் கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தொகையின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவருகிறது.

அதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 1 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
கண்டி வன்செயல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு 2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. கண்டி வன்செயல்களால்  பாதிக்கபட்டவர்களுக்கு  2 சதவீத சலுகை வட்டியில் கடன். அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5