விவசாய அமைச்சின் மாத வாடகை 2 கோடியே 52.5 லட்சமாக அதிகரிப்பு ..கடும் விமர்சனத்திற்கு உள்ளான விவசாய  அமைச்சின் வாடகை தற்பொது மேலும் 7.5 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய அமைச்சிற்கு வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்திற்கு 2கோடி 45 லட்சம்  மாதவாடகை வழங்கப்பட்ட   நிலையில் அது தற்போது 7.5 லட்சத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் இந்த வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு தற்போதய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர் கூறியுள்ளதாக  கூறப்படும் அதேவேளை இவ்வருடத்திற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதால் சட்டரீதியான சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாய அமைச்சின் மாத வாடகை 2 கோடியே 52.5 லட்சமாக அதிகரிப்பு .. விவசாய அமைச்சின் மாத வாடகை 2 கோடியே 52.5 லட்சமாக அதிகரிப்பு .. Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5