பேஸ்புக் ஒன்றுகூடல்.. 19 இளைஞர் யுவதிகள் பொலீசாரால் கைது. #இலங்கை


பேஸ்புக் நண்பர்களுடன் இன்று (13) அதிகாலை மிடியாகொட பிரதேசத்தில் நடாத்திய கொண்டாட்டத்தில்
கலந்துகொண்டவர்களில் 19 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களில் 7 பேரிடம் போதைப் பொருட்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் யுவதிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அனுராதபுரம், நொச்சியாகம, தம்புத்தேகம மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 150 இற்கும் அதிகமானோர் இந்த நள்ளிரவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடத்தில் கஞ்சா, போதை ஊட்டும் டொபி என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சுற்றிவளைப்புக்கு 75 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
பேஸ்புக் ஒன்றுகூடல்.. 19 இளைஞர் யுவதிகள் பொலீசாரால் கைது. #இலங்கை பேஸ்புக் ஒன்றுகூடல்.. 19 இளைஞர் யுவதிகள் பொலீசாரால் கைது. #இலங்கை Reviewed by Euro Fashions on May 13, 2018 Rating: 5