மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பதில் எந்த தவறும் இல்லை

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர்.

இதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளரும் இவ்வாறு குறிப்பிட்டார்.


மே 18ஆம் திகதி LTTE க்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் LTTE க்கு ஆதரவாக வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.இதேபோன்றே வடக்கில் யுத்தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை என்றும் , அங்குள்ள மக்களும் எமது மக்களே என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

செய்தியாளர் கேள்வி: LTTE ஒரு பயங்கரவாத அமைப்பு . இந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்ட தினமே இவ்வாறு அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை அரசாங்கம் அங்கீகரிக்கின்றதா?


அமைச்சர் ராஜித சேனாரத்ன :  வடக்கில் உள்ள தமிழர் , உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் LTTEயை போன்றே பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்துவருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.


வடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை .பொதுமக்களும் இறந்ததுண்டு. அதுபோல் தான் இ;ங்கும். வடக்கு மக்கள் இதனை அனுஷ்டிப்பதாலேயே உங்களுக்கு பிரச்சனை இருப்பதாக தெரிகின்றது. இது தவறானது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பதில் எந்த தவறும் இல்லை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  அனுஸ்டிப்பதில் எந்த தவறும் இல்லை Reviewed by Madawala News on May 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.