தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மே 18 , தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம்
செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் 122வது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது, சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தப் பிரேரணையினை முன்மொழிந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களின் இனஅழிப்பு தினமான மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் கோரிக்கை விடுத்ததுடன், உலக தமிழ் மக்கள் அனைவரும் இனஅழிப்பு நாளான மே 18 ஆம் திகதியினை துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் கோர வேண்டுமென வேண்டுகோள்விடுத்தார்.
சபையில் சகல உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதன் பிரகாரம், மே 18 ஆம் திகதியினை இனஅழிப்பு நாளாகவும், த மிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப்படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்தார்.
தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் இன அழிப்பு தினமாகவும், தமிழ்தேசிய இனத்தின் துக்க நாளாகவும் பிரகடனம் செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Reviewed by Madawala News on May 10, 2018 Rating: 5