17 வயது யுவதி சடலமாக மீட்பு. #காத்தான்குடி போலீசார் விசாரணை.


காத்தான்குடி காவற்துறை பிரிவிட்குட்பட்ட தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக்
கொட்டிலில் இருந்து யுவதி ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

தாழங்குடா, வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியை அண்டி வாழும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த யுவதியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாகவும் குடும்பம் சுமுகமாக வாழ்க்கை நடாத்துவதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக திங்கட்கிழமை காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைப்பேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 வயது யுவதி சடலமாக மீட்பு. #காத்தான்குடி போலீசார் விசாரணை. 17 வயது யுவதி சடலமாக மீட்பு. #காத்தான்குடி போலீசார் விசாரணை. Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5