16 வயது சிறுவனை தும்புத்தடியால் அடித்தவருக்கு (தாயின் கணவர்) 2 வருட கடூழிய சிறை தண்டனை. #முள்ளிப்பொத்தானை


(அப்துல்சலாம் யாசீம்)
தன் மனைவியின் முதல் திருமணத்தின் குழந்தையாகிய 16 வயது சிறுவனை தும்புத்தடியால்
தாக்கி காயம் ஏற்படுத்திய நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறை தண்டனையும். இரண்டாயிரம் ரூபாய் தண்டமும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்டயீடு வழங்குமாறும்  திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் 65 வயதுடைய நபர் திருமணம் முடித்த மனைவியின் (முதல் திருமணத்தில் பிறந்த  16 வயது சிறுவனை கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி  தும்புத்தடியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவ்வழக்கு விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அண்ணலிங்கம் பிரேம சங்கர் முன்னிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிறுவனின் சகோதரி மற்றும்  பொலிஸ் விசாரணை அதிகாரி. சட்ட வைத்தியதிகாரி ஆகியோர்  சாட்சியமளித்த நிலையில் எதிரி மீதான குற்றச்சாட்டு  நிரூபிக்கப்பட்டதாகக்கொண்டு மேற்குறிப்பிட்ட  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
16 வயது சிறுவனை தும்புத்தடியால் அடித்தவருக்கு (தாயின் கணவர்) 2 வருட கடூழிய சிறை தண்டனை. #முள்ளிப்பொத்தானை 16 வயது சிறுவனை தும்புத்தடியால் அடித்தவருக்கு (தாயின் கணவர்) 2 வருட கடூழிய சிறை தண்டனை. #முள்ளிப்பொத்தானை Reviewed by Madawala News on May 12, 2018 Rating: 5