சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக 150 டொன் பேரீச்சம்பழமே கிடைத்தது... நாடு முழுவதும் விநியோகிக்குமாறு பிரதமர் உத்தரவு.


புனித ரமழான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்காக தேவையான அளவில்
பேரீச்சம்பழங்களை நாடு முழுவதும் விநியோகிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹாலிம் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரின் கோரிக்கைகளை அடுத்தே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரமழான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்கள் ஊடாக இஸ்லாமியர்களுக்கு பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக்கப்படும்.

இதற்கு சவுதி அரேபியா இலவசமாக வழங்கியுள்ள 150 டொன் பேரீச்சம்பழம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை தவிர இலங்கை ச.தொ.ச நிறுவனமும் 150 டொன் பேரீச்சம்பழங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பேரீச்சம்பழ அறுவடை இம்முறை குறைந்துள்ளதால், இலவசமாக கிடைக்கும் தொகையும் குறைந்துள்ளது.

இதனால், ச.தொ.ச நிறுவனத்தின் ஊடாக போதுமான பேரீ்ச்சம்பழங்கள் மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யுமாறு நிறுவனத்தின் தலைவருக்கு நிதியமைச்சின் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

மேலும் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பங்காடிகளை நடத்தி வரும் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக 150 டொன் பேரீச்சம்பழமே கிடைத்தது... நாடு முழுவதும் விநியோகிக்குமாறு பிரதமர் உத்தரவு. சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக 150 டொன் பேரீச்சம்பழமே கிடைத்தது... நாடு முழுவதும் விநியோகிக்குமாறு பிரதமர் உத்தரவு. Reviewed by Madawala News on May 14, 2018 Rating: 5