150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நல்லிணக்க நிகழ்ச்சி திட்டம்.


அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் மூலம் வருடா வருடம் நடாத்தப்படும் சமூக நல்லிணக்க
தலைமைத்துவ பயிற்சி பட்டறை 14வது வருடமாகவும் அல்-மீஸான் பவுண்டேஷன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல் ஹாஜ் நூறுள் ஹுதா உமர் தலைமையில் இன்று சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மண்டபத்தில் ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்றது.

 இதில் அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பாடசாலைகளை சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்வில் விரிவுரையாளர்களாக தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் Dr.முபாரக் அப்துல் மஜீத், இலங்கை சமாதான கட்கைகள் நிலைய பணிப்பாளர் Dr.சுலைமா லெப்பை ரியாஸ்,அரசியல் விமர்சகரும், தொழிலதிபருமான MHM. இப்ராகிம் கனேடிய பல்கலைகழக சேவைகளின் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அலுவலர் ஜேசு சகாயம், சிரேஷ்ட விரிவுரையாளர் MA.கலீல் ரஹ்மான் மற்றும் அல்-மீஸான் பவுண்டசன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டனர். மத,மொழி,பிரதேச பாகுபாடுகள் கலைந்த இலங்கையில் நல்லிணக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

 மீஸான் ஊடக பிரிவு
150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நல்லிணக்க நிகழ்ச்சி திட்டம். 150 க்கும் மேற்பட்ட தமிழ்,முஸ்லிம், கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட நல்லிணக்க  நிகழ்ச்சி திட்டம். Reviewed by Madawala News on May 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.