உத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம்! 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்!


பாடசாலை சிறார்கள் சென்ற மினிபஸ் ஒன்று ரயிலுடன் மோதியதில் 13 சிறார்கள் பரிதாப மரணம்.

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் பயணம் செய்த பஸ் புகையிரதத்துடன் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


உத்தர பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வாகனம் ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த ரயில், பள்ளி வாகனம் மீது மோதியது. விஷ்ணுபுரா காவல் சரகத்திற்கு உட்பட்ட துதி பகுதியில் இந்த விபத்து நடந்தது.


ரயில் மோதியதில் பள்ளி வாகனம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் இருந்த 13 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள், பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து, மிகவும் துரதிஷ்டவசமானது என்றும், காயம் அடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநத், விபத்து குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம்! 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்! உத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம்!  13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்! Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.