தமிழ் முஸ்லிம் உறவு.... தமிழ் / சிங்கள கலவரத்தின் போது எனது ஊரில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். tm


அது 1977ம் ஆண்டு, 
ஏழு வருட சாபம் என்றழைக்கப்பட்ட்ட சிரிமாவோ பண்டாரநாயகவின் பட்டினி ஆட்சியை கவிழ்த்து,

1/5 என்ற பெரும்பான்மையினால் ஜேஆரின் ஐதேக ஆட்சியமைத்து சில மாதங்களே இருக்கும்,

சிங்கள, தமிழ் மோதலினால் ஏற்பட்ட வன்செயலில், 
எமது ஊரிலிரிருந்து 2 மைல்கள் தொலைவில் இருக்கும் வத்தேகம நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களின் கடைகள் வீடுகள் உடைத்து எரிக்கப்படுகிறது,


“V S நாடார் என்ற அந்த விசாலமான கடைக்குள் இருந்த ஒருவர் உயிரோடு எரிக்கப்படுகிறார்”


மடவளை மதீனாவில் கல்வி கற்பிக்கும், 
எனக்கு நினைவு தெரிந்து, 
கந்தப்பு சேர், (பக்கர் நானா வீட்டில் கூலிக்கு இருந்தார்கள்) கணபதிப்பிள்ளை டீச்சர் போல இன்னும் 10-15 பேர் கொண்ட ஆசிரியர் குழாம் இங்கு மடவளையில் பதறுகின்றனர், 


“அவர்களுக்கு உடனே யாழ்ப்பாணம் புறப்படணுமாம்”

எனது தாயார் தலைமையில் ஒரு பெண்கள் குழு உடனடியாக ஸ்தலத்திற்கு போய் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல, 

“அவர்களோ வடக்கில் எங்களை கொண்டுபோய் சேருங்கள்” என அடம்பிடிக்க, 

உடனடியாக டீச்சர்மாருக்கு முஸ்லிம்களை போல சேலை அணிவிக்கப்பட்டு, நெற்றியில் ஜொலிக்கும் குங்குமப்பொட்டு அழிக்கப்படுகிறது,

‘முக்காடு போட்ட மிசிஸ் கந்தப்பு’ வித்தியாசமான கெட்டப்பில் ..

ஒருநாள் முதல்வர் போல ஒருநாள் பாத்திமாக்கள் உருவானார்கள். 

குத்தூஸ் நானாட ‘தஹரா’ என்ற பேரில் இயங்கும் சில்வர் லைன் பஸ் மூலமாக யாழ்தேவியில் ஏற்றப்பட்டு பத்திரமாக தத்தமது ஊர்களை நோக்கி அனுப்பப்படுகிறார்கள். (அப்போது இந்த ப்ரைவேட் பஸ் இல்லை, சில்வர் லைன் என்பது SWRD பண்டாரநாயகவினால் விரட்டப்பட்ட வெள்ளைக்கார கம்பனி பஸ்கள்)

“இந்த பஸ்ஸில் உம்மாவோடு இன்னும் சில தாய்மார்களும் பாதுகாப்புக்காக தமிழ் டீச்சர்மாரோடு சென்றார்கள் என்பது கொசுருச் செய்தி”

இந்த ‘வரலாற்றில் ஓர் ஏடு’ பதிவுக்கும் ‘ஷண்முகா முஸ்லிம் உடை’ போராட்டத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என இத்தாள் ச்சை டைம்லைன் மூலமாக அறியத்தருகிறேன்,

- ஷஹீத் ரிஸ்வான்-
தமிழ் முஸ்லிம் உறவு.... தமிழ் / சிங்கள கலவரத்தின் போது எனது ஊரில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். tm தமிழ் முஸ்லிம் உறவு....  தமிழ் / சிங்கள கலவரத்தின் போது எனது ஊரில் நடந்த சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். tm Reviewed by Euro Fashions on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.