சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகார ஆர்ப்பாட்ட முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மகஜர் இதுதான்.


(அப்துல்சலாம் யாசீம் )
அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர்  ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள்
என மிரட்டிய கணவர்கள் மீதும்  குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று (25) திருகோணமலை சிறிசன்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும், பழைய
மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகால வரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும்
முழுச்சட்டையினை அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும்
அமைந்துள்ளது  எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்று புதன் கிழமை காலை 7.00மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 10.00மணிவரை தொடர்ந்ததுடன் சிறந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கும்,வலயக்கல்வி திணைக்களத்திற்கும் மகஜரொன்றினையும் வழங்கி வைத்தனர்.

அம்மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது 

கல்வி  ஒழுக்கம்  நேர்மை  என்பதை அடிப்படையாகக் கொண்டே நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இயங்குகின்றது. கல்விமாண்களை உருவாக்குதல் என்பதை விட நற்பிரசைகளை உருவாக்க வேண்டும் என்பதே அத்தனை கல்வி நிறுவனங்களினதும் அரசினதும் முதல் நோக்கமாகும்.
பல்லினமக்கள் வாழும் இந்நாட்டில் கடந்தகால பிரிவினைகளையும் அதன்பால் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும் கருத்தில் கொண்டு இனி ஒருபோதும் இவ்வாறான நிகழ்வுகள் குரோதங்கள் வளரக்கூடாது என்பதில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் மிகக்கவனத்துடன் பயணிக்கின்றோம்.

அந்த வகையில் எதிர்கால சந்ததியினர் மத்தியில் அவற்றை மிகக்கவனமான கொண்டு செல்ல வேண்டிய தலையாய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. அது பாடசாலைகளின் மூலம் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம் அதன்படி வழி நடத்தப்படுகின்றோம்.

இவ்வாறிருந்தும் இந்நாட்டில் தேசிய கொள்கைகளுக்கமைய பாடசாலைகள் இருமொழியாகவும் மூவினத்திற்கும் என தனித்தனியாக இயங்குகின்றது. இங்கு அரச சட்டதிட்டங்கள்  ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் இனரீதியான பாடசாலைகள் தமது கலாச்சாரம்  சமயம்  பிரதேசம்இ தாபிக்கப்பட்டதன் நோக்கம் என்பவற்றுக்கு அமைய பிரத்தியேக ஒழுங்கு முறைகளையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடித்து வருவது ஒன்றும் புதிதல்ல. இந்த ஒழுங்குகளுக்கும் விதிமுறைகளிலும் ஒருவர் தலையிடுவதும் இல்லை குறைத்துமதிப்பிடுவதும் இல்லை. இவை சுமுகமாக சென்றுகொண்டிருக்கும் ஒன்று.


பாடசாலை முதலாம் தர அனுமதியில் கூட அரசு குறித்த சமயப் பாடசாலைகளுக்கு பிறசமயத்தவர் எனின் 5 வீதத்தை மட்டுமே வழங்குகின்றது. அவ்வாறு விரும்பி சேரும் மாணவர்கள் குறித்த பாடசாலையின் நடைமுறைப் பழக்கவழக்கங்களை பின்பற்றுகின்றனர்.

சேலை முழு இலங்கைப் பாடசாலைகளிலும் ஒரு பொதுவான ஆடையாக சிறுசிறு வேறுபாடுகளுடன் அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப அணியப்படுகின்றது. இது சுமுகமாக சென்றுகொண்டிருக்கும் போது அண்மைக்காலமாக முழு ஆடையணிந்த முஸ்லிம் ஆசிரியர்களின் இந்துப்பாடசாலைகளின் வருகையும் அவர்களின் செயற்பாடுகளும் ஒரு சமயப் பாடசாலையின் பாரம்பரியத்தையும் ஒழுங்கு விதிகளையும் குழப்புவதாக உள்ளது. அந்த வகையில் தி.ஸ்ரீ.சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் நடந்து கொண்ட விதம் இப்பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதுடன் இப்பாடசாலை சமூகத்தினர் அனைவரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது.
இதுகாலவரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுக்காற்சட்டையினையே அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்கட்படுத்தியுள்ளது.


அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.


ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழிகாட்டலாக அமையும். இப்பிரச்சினையால் மாணவர்கள் மத்தியில் முஸ்லிம் தமிழ் எனும் இனவேறுபாட்டை இவ்வாசிரியர்கள் தூண்டப்படுவது ஆரோக்கியமானதல்ல.

எனவே கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய பாடசாலை பகிஸ்கரிப்பையும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்துகின்றோம்.

1. அத்துமீறி பாடசாலைக்குள் வந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும் குறிப்பிட்ட  ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. இவ்வாறு பாடசாலை நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவித்ததுடன் எமது பாடசாலை விதிகளுக்கு கட்டுப்படாத ஆசிரியர்கள் உடன் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.


3. ஏதிர்காலத்தில் இவ்வாறு மதக் காரணங்களைக் காட்டி பாரம்பரிய கலாச்சாரப் பாடசாலைக்கு பொருத்தமில்லாத ஆசிரியர்களை   நியமிக்கக்கூடாது.

4. ஆரம்ப நிலையில் இப்பிரச்சினையை கண்டுகொள்ளாத திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் கி/மா கல்விப்பணிப்பாளர்   கிழக்கு மாகாண கல்விச்செயலாளர் ஆகியோரையும் கண்டிக்கிறோம்.

5. இது போன்று தேவையற்ற சம்பவங்கள் எந்தப் பாடசாலைகளிலும் நிகழக்கூடாது என

மாண்புமிகு கல்வி அமைச்சர் மற்றும்  அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகார ஆர்ப்பாட்ட முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மகஜர் இதுதான். சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா விவகார ஆர்ப்பாட்ட முடிவில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மகஜர் இதுதான். Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.