கலாச்சார சீர்கேடுகளுக்கு வித்திடும், ஆசிரியர்களின் இனவாத போராட்டம். (இன,பேதமற்ற பொதுச்சிந்தனைவாதிகளுக்காக)


உலகளாவியரீதியில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,
மனதை உருக்குலைக்கும் விதமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சிறார்,பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

இவ்வாறான பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களுல் ஒன்றாக பெண்களின் ஆடைகளும் அமைந்திருக்கின்றன. உடலையும், உடல் அழகையும் மறைப்பதற்காக ஆடைகள் பயன்படுத்தப்பட்ட காலம் மலையேறிப்போய், உடல் அழகை அப்பட்டமாக வெளிபடுத்தும் பல நவீன ஆடைகள் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. நவீன வளர்ச்சி இல்லாத காலத்தில் ஆடைகளில் காணப்பட்ட ஒழுக்கம் இன்றைய நவீன யுகத்தில் முழுமையாக சிதைபட்டுக்கொண்டிருக்கின்றது. இதை யாராலும் மறுக்க முடியாது.

காலாகாலம் நவீனம் எவ்வாறான வகையில் வளர்ச்சியடைந்து வந்த போதும்,
மதங்களின் செயற்பாடுகளில் நவீனம் எக்காலமும் தன் ஆதிக்கத்தை செலுத்திவிட முடியாது, மதங்களும்,அதன் தனித்துவங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவையல்ல. எல்லா மதமும் ஒற்றுமை, சமதானம் என்பவற்றையை அதிகம் போதிக்கின்றது.

இலங்கை ஜனநாயக நாடு, இந்த நாட்டில் மூவின மக்கள் சந்தோசமாகவே வாழ்கின்றனர்.  இந்த நாட்டில் மூவின மக்களும் சமமாகவே கருதப்படுகின்றனர், அதேபோல அவரவர் பின்பற்றும் மதம் சார்ந்த நம்பிக்கைக்கு எவராலும் தடைநிற்க முடியாது.
ஆனால் குறோதம்,காழ்ப்புணர்ச்சி கொண்ட இனவாதிகளும் ஏதோவொரு வகையில் படங்களில் வரும் வில்லர்களைப்போல ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி இனப்பிரச்சினைகளைத்துாண்டி இரத்தம் ஓட்டி சந்தோசமும் படுகின்றனர்.
(இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சிதைப்பதால் இதுவரை காலமும், இவர்கள் கண்ட பலன் எதுவுமில்லை) இவ்வாறான இனவாதிகளை மக்கள் இனங்கண்டு, அவர்களை சமூதாயத்திலிருந்து தள்ளி வைத்தல் காலத்தின் அவசியமாகும்.

அந்த வகையில், அண்மையில் இலங்கையிலுள்ள ஒரு இந்து பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிவதை எதிர்த்து ஆசரியர்கள் வேடத்திலுள்ள ஒருசில இனவாதிகளால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆரப்பாட்டமானது தனியொரு ஈழம் கோரிய செயற்றபாட்டையொட்டிய அமைந்துள்ளது. அவ்வாறு தனியொரு ஈழம் கோரி அப்பாவி மக்களை பலியாக்கியது இன்னும் நினைவில் வரவில்லையா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்ற பலமொழியாய் எத்தனை அப்பாவி உயிர்கள் இந்த இனவாத செயற்பாட்டால் அழிந்து போயின. அவ்வாறானதொரு நிலையிலிருந்து இந்த நாடு இன்னும் மீள்கட்டமைப்புக்கு உட்படாத நிலையில் இன்னுமொரு இனவாத யுத்தத்தை ஆரம்பித்த அப்பாவி மக்களை கொன்று குவிக்க இனவாதிகள் திட்டமிடுகின்றனர்.

வண்டுதனைக் கவருவதற்காய் மலர்கள் வாசம் பரப்புவது போன்றுதான், ஆண்களை(கணவன்மார்களை) கவர்வதற்கான உடலமை பெண்களுக்கும் இறைவன் வழங்கியுள்ளான். ஆனால் இன்று பலர் தன் உடலமை அப்பட்டமாக காட்டும் வகையில்(ஆபாசமாக) உடைகளை அணிந்து திரிகின்றனர்.

ஒழுக்கத்தின் அடிப்படையை பிஞ்சு மாணவர்களின் உள்ளத்தில் விதைக்க வேண்டிய ஆசிரியர்கள், இன்று பாடசாலைக்கு அணிந்து வரும் (ஆபாச)ஆடைதனை பார்த்து நிறைய மாணவர்கள் வழிதவறி,தவறான விடயங்களில் ஈடுபடுகின்றனர்.

நிறைய மாணவர்களால் ஆசிரியைகளின் கண்களைப்பார்த்து பேச முடிவதில்லை, காரணம் அந்த ஆசிரியைகள் அணிந்துவரும் ஆடை ரொம்ப ஆபாசம். இது மாணவர்களின் குற்றமில்லை. ஆடை சுதந்திரம் என்ற பெயரில் அரைகுறை ஆபாச ஆடைகளுடன் உலாவரும் கயவர்களின் ஆட்டத்தை நிறுத்தும் காலம் வந்து விட்டது.

நாகரீகம் வளர்ச்சி பெற்றிராத காலகட்டத்தில், இழைகுழைகளால் தங்கள் உடல்களை மறைத்து தங்களின் மானத்தை பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்த படிப்பறிவு இல்லாத ஆதிவாசிகளையும், இன்று தங்களை நாகரீகமானவர்கள் என்று கூறும் அரைகுறை ஆபாச ஆடை மடச்சாம்பிராணிகளையும் ஒப்பீட்டு நோக்கும் நம்முடைய முன்னோர்களே சிறந்தவர்கள்.

பெண்பிள்ளைகளையும், மனைவி மக்களையும் வெளி இடங்களுக்கு அரைகுறை ஆபாச ஆடைகளுடன் அனுப்பும் ஒவ்வொரு ஆணும், வெட்கப்பட வேண்டும். அரைகுறை ஆபாச ஆடைகளுடன் நின்று கொண்டு
”எங்கள் அழகும்,உடலும் கண்டவனுக்கு இல்லை, கொண்டவனுக்கு மாத்திரமே”
என்று கொக்கரிக்கும் பத்தினிகளே!!
வாயால் வடை சுடாமல் அரைகுறை ஆபாச ஆடைகளை களைந்துவிட்டு கண்ணியமான,ஒழுக்கமான ஆடைகளை அணிந்து ”எங்கள் அழகும்,உடலும் கண்டவனுக்கு இல்லை, கொண்டவனுக்கு மாத்திரமே” என்ற விடயத்தை நடமுறைக்கு கொண்டு வாருங்கள்.

நாகரீகம் என்ற பெயரில் அணிந்து திரியும், இவ்வாறான நாகரீகமற்றக ஆபாச அரைகுறை ஆடைகளால், இவ்வாறான கீழ்த்தரமான செயல்களால், பல ஆண்கள்(கணவன்மார், பெற்றோர்கள்) உங்களுக்கு இவற்றை விளங்கபடுத்த முடியாமல் உள்ளத்தளவில் புழுங்கி வேதனையடைகின்றார்கள்.

ஆபாசத்தை ஆதரித்து, பெண்களை ஆபாசபொருற்களாக சித்தரிக்கும் நீங்களே, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் போது...
பெண்களை மதித்து அவர்கள், பெண்களுக்கான ஒழுங்கு விதிமுறைகளை அமைத்து, அவர்களுக்கான உரிமைச் சுதந்திரத்தை கொடுத்த நாங்கள் எந்தளவு கொந்தளித்து ஆரப்பாட்டம் செய்ய வேண்டும்..

இன,மத வேறுபாடு இல்லாமல் சமூகத்தில் நடைபெறும் இனவாதிகளின் இவ்வாறான கீழ்த்தரமான ஈனச் செயல்களை மனிதன் என்றரீதியில் தட்டிக்கேற்பதற்கு நாங்கள் ஒன்றுபடுவோம்!!


MM.Mohamed Zujah
கலாச்சார சீர்கேடுகளுக்கு வித்திடும், ஆசிரியர்களின் இனவாத போராட்டம். (இன,பேதமற்ற பொதுச்சிந்தனைவாதிகளுக்காக) கலாச்சார சீர்கேடுகளுக்கு வித்திடும், ஆசிரியர்களின் இனவாத போராட்டம். (இன,பேதமற்ற பொதுச்சிந்தனைவாதிகளுக்காக) Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.