ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP ) - கத்தார் கிளையின் ஆரம்ப பொதுக்கூட்டம் .


ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன (SLPP ) - கத்தார் கிளை ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்பக் கூட்டம் கத்தாரில் இடம்பெற்றது.

கடந்த  20 ஆம் திகதி மாலை தோஹா  Umm Al Saneem  லக்பிம உணவகத்தில்  A.H. சஹீர்தீன் ஏற்பாட்டில் பொதுஜன  பெரமுனவின் கிளை ஒன்றை அமைக்கும் நோக்கில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

நிறுவனங்களின்  பொது மேலாளர்கள்,  நிறுவன இயக்குனர்கள் , பொறியியலாளர்கள் மற்றும் பல்வகைபட்ட  உயர் தொழில்சார் நிபுணர்கள் இந்த  கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி,  மஹிந்த ராஜபக்சவை பதவிக்கு கொண்டு வருவதற்காக இந்த கூட்டம் நோக்கப்பட்டது.

குறிக்கோள்களை அடைவதற்கு இதில்  பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும்  கத்தார் நாட்டின்  ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்களாக பொறுப்பெடுத்து   தீவிரமாக ஈடுபட வேண்டும் என தீர்மானம் எடுக்கபடது.

எதிர்வரும்  மே மாதம்  அடுத்த பொதுக்கூட்டத்தை பெரிய அளவில்  நடத்தவும் முடிவெடுக்கபட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP ) - கத்தார் கிளையின் ஆரம்ப பொதுக்கூட்டம் . ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன (SLPP ) - கத்தார் கிளையின் ஆரம்ப பொதுக்கூட்டம் . Reviewed by Madawala News on April 23, 2018 Rating: 5