பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவராக பொது ஜன பெரமுன அனுர பிரனாந்து. உப தலைவராக ஏ.எல்.எம்.ரஸான்.


(மொஹொமட்  ஆஸிக்) 
பூஜாபிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை
சேர்நத் அனுர பிரனாந்து  இன்று 23 ம் திகதி தெரிவானதுடன் அதன்  புதிய உப தலைவராக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.எம்.ரஸான் தெரிவானார்,


பூஜாபிட்டிய  பிரதேச சபையின் புதிய தலைவரையும் உப தலைவரையும் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று  23 ம் திகதி பூஜாபிட்டிய  பிரதேச சபையில்   மத்திய மாகாண  உள்ளூராட்சி ஆனையாளர் மேனக ஹேரத் தலமையில் இடம் பெற்றது.


முதலில்  புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான பெயர்களை மும்மொழியுமாரு உள்ளுராட்சி ஆனையாளர் கேட்டுக்கொணடதற்கு இனங்க  ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் உறுப்பினர் அனுர பிரனாந்துவின் பெயரை சம்பத் தர்மபிரிய மும்மொழிந்து லக்ஷ்மன் தொலபிஹில்ல வளி மொழிந்தார். ஐக்கிய தேசிய கட்சி சார்பில்  சுரஞ்ஜித் குமார விக்கிரமசூரிய அவர்களின்  பெயரை ரம்சான்  மொஹமட் மும்மொழிந்து சுனில் கொடுகொடெல்ல வழி  மொழிந்தார்.


தலைவர் பதவிக்கு இரு பெயர்கள் மும்மொழியப்பட்டுள்ளமையால் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டதுடன் இது திறந்த வாக்கெடுப்பாக இடம்பெற்றது.

அதன் போது  ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியை சேர்ந்த அனுர பிரனாந்து 17 வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சுரஞ்சித் குமார விக்கிரமசூரிய 8 வாக்குகளையும் பெற்றதுடன் அனுர பிரநாந்து புதிய தலைவராக தெரிவானார்.


 ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியுடன் இனைந்து ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியும் வாக்களித்து. ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஐக்கிய தெசிய கட்சியின்  8 உறுப்பினர்களது வாக்குகள் மட்டுமே  கிடைத்தது.


அதன் பின் உப தலைவர் தெரிவின் போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தர் ஏ.எல்.எம். ரஸானின் பெயரை  ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் சம்பத் தர்மப்பிரிய  மும் மொழியும்போது எழுந்து நின்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுரஞ்சித் குமார விக்கிரமசூரிய தமது கட்சிக்கு சபையை விட்டு வெலியேர  அனுமதி தருமாரு கேட்டார் அது அவரவர் விருப்பம் என  ஆனையாளர் தெரிவித்துடன்  ஐக்கிய தேசிய கட்சியின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் 4 உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேரினர்.


அதன் பின் ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னனியின் உறுப்பிளர்களும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினரும் சபையில் இருந்தனர். உப தலைவரை தெரிவு செய்வதற்கான சபையின் கோரம்  போதுமான அளவு இருப்பதாக தெரிவித்த ஆனையாளர் உப தலைவரை தெரிவு செய்யுமாரு வேண்டிக் கொண்மார்.

அதன்  படி  ஏற்கனவே மும் மொழியப் பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஏ.எல்.எம்.ரஸானின் பெயரை அஜித் சமரதுங்க வளிமொழிந்தார். உப தவைர் பதவிக்கு வேரு பெயர்கள் மும்மொழியாததால் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏ.எல்,எம். ரஸான் தெரிவு செய்யப்பட்டார்.


இத்துடன் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச சபைகளும அமைத்து முடிவடைந்தது

2018 04 23 ஆஸிக்
பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவராக பொது ஜன பெரமுன அனுர பிரனாந்து. உப தலைவராக ஏ.எல்.எம்.ரஸான். பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவராக பொது ஜன பெரமுன அனுர பிரனாந்து.  உப தலைவராக ஏ.எல்.எம்.ரஸான். Reviewed by Madawala News on April 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.