திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக இடம்பெறும் ஆர்பாட்டம். காரணத்தை விளக்கினார்கள் ஆர்ப்பாட்டகாரர்கள்.


(அப்துல்சலாம் யாசீம்)
அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர்  ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும்  குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று (25) திருகோணமலை சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகால வரையில் சேலை அணிந்து வந்த ஆசிரியர்கள் இனி ஹபாயா எனும் முழுச்சட்டையினை அணிந்து வருவார்கள் என பாடசாலை அதிபரை குறித்த ஆசிரியர்களின் கணவர்கள் மிரட்டியது பாடசாலை நாகரீகத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

அத்துடன் அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது  எனவும்  ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்று புதன் கிழமை காலை 7.00மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 10 .00மணிவரை தொடர்ந்ததுடன் சிறந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையெனவும் குறிப்பிட்டனர்.


திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக இடம்பெறும் ஆர்பாட்டம். காரணத்தை விளக்கினார்கள் ஆர்ப்பாட்டகாரர்கள். திருகோணமலை இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக இடம்பெறும் ஆர்பாட்டம். காரணத்தை விளக்கினார்கள் ஆர்ப்பாட்டகாரர்கள். Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.