"வைத்திய நிலையம்" சுற்றி வளைக்கப்பட்டது.

-கதிர் கான்-
மினுவாங்கொடை - யட்டியன பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வைத்திய நிலையம் என்ற
பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியை,  மினுவாங்கொடை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, அநுராதபுரம், மாகோ, கல்கமுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 - 40 வயதுக்கிடைப்பட்ட நான்கு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் பணியாற்றுவதாகக் கூறி வீடு ஒன்றை வாடகைக்குப் பெற்று குறித்த பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

"வைத்திய நிலையம்" சுற்றி வளைக்கப்பட்டது. "வைத்திய நிலையம்"  சுற்றி வளைக்கப்பட்டது. Reviewed by Euro Fashions on April 16, 2018 Rating: 5