பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை.


( ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை மாவட்டம் சீனக்குடா பிரதேசத்தில் அமையப் பெற்றிருக்கும்
 பளிங்கு கடற்கரைக்கு இக் காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை காணக் கூடியதாகவுள்ளது.

தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு சனி ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகளவான உள்ளூர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதனை அவதானிக்க முடிகிறது நாளாந்தம் நூற்றுக்கும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இப் பளிங்கு கடற்கரைக்கு வருகை தந்து நீராடிச் செல்கின்றனர் குறித்த பகுதிக்குள் மாத்திரமே நீராட முடியம் என்பதை தங்களது எல்லைக் கோட்டினால் இதனை பராமரித்து வரும் இலங்கை விமானப் படையினர் அடையாளமிட்டுள்ளனர்.


இதற்கான நுழைவுக் கட்டணம் தனியார் ஒருவருக்கு 20 ரூபா அறவிடப்படுகிறது வாகனங்களுக்கு வேறாக சா 50 ரூபாவில் இருந்து வாகன தரங்களை பொறுத்து கட்டணமாக அறவிடப்படுகிறது .

இதனால் இப் பளிங்கு கடற்கரை சுற்றுலாப் பகுதிகளை அதிகம் அதிகம் கவரும் பிரதேசமாக மாற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை. பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை. Reviewed by Euro Fashions on April 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.