மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் பொலீஸ்காரர் பலி.


மெதிரிகிரிய - அம்பகஸ்வெவ பாதையின் 
வைத்தியா வீதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார். 


குறித்த பொலிஸ் உத்தியோத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாதையின் அருகில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் பலத்த காயமடைந்த அவரை மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 

மெதிரிகிரிய, திலவுன்கடவல பகுதியை சேர்ந்த புலஸ்திபுர பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

விபத்துடன் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் பொலீஸ்காரர் பலி. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் பொலீஸ்காரர் பலி. Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5