அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மை எமக்கு வேண்டாம்... மக்கள் நலன் கொண்ட எதிர்கட்சி தலைவர் வேண்டும் .


( ஜெமீல் அகமட் )
 அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மை போன்ற எதிர்கட்சி தலைவர் ஒன்று தேவைப்பட்டது
அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்மந்தன் ஐயா அவர்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மறைமுகமான ஆதரவால் எதிர்க்கட்சி தலைவராக மகுடம் சூட்டப்பட்டார்.

 என்பது அரசியல் வட்டாரத்தில் புதைந்து இருக்கும் புதையல் என்பது அரசியல்வாதிகளுக்கு தெரியும் இன்றைய எதிர்கட்சி தலைவர் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை தட்டிக்கேட்டு பாராளுமன்றத்தில் பேசாமல் அரசாங்கத்துக்கு வக்காலத்து வேண்டிக்கொண்டு இந்த நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துகொண்டு தனது அரசியல் காலத்தை கடத்துகின்ற எதிர்கட்சி தலைவரை விட நாட்டு மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு பொருத்தமான எதிர்கட்சித் தலைவர் ஒருவர் இன்று நாட்டு தேவைப்படுகின்றார்..

 அன்று எதிர்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் ஐயா இருந்தார் அதன் பிறகு தமிழன் ஒருவன் எதிர்கட்சி தலைவராக வந்த அதிஸ்டம் சம்மந்தன் ஐயாவுக்கு கிடைத்தாலும் அவர் தனது கௌரவத்தை மக்கள் மத்தியில் பாதுகாக்க அரசிற்கு ஆதரவாக கை உயர்த்தும் ஒரு எதிர்கட்சி தலைவர் என்றால் அது இராசம்மந்தன் என்றுதான் கூற வேண்டும் இன்றைய பாராளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் ,கூட்டு எதிர்கட்சி ,ஆட்சியின் எதிர்கட்சி இப்படி பல பிரிவுகள் இருக்கும் போது ஆட்சியாளர்களுக்கு அடுத்த பெரும்பாண்மை உள்ளவர்களில் ஒருவரே எதிர்கட்சி தலைவராக வர வேண்டிய சம்பிரதாயத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டு இருப்பது ஜனநாயக முறை அல்ல என்பதை கூட்டு எதிர்கட்சிகள் சொல்வதும் குற்றமில்லை.

 அவர்களே எதிர்கட்சி தலைவருக்கு தகுதியானவர்கள் என்று ஜனாதிபதி பிரதமருக்கு தெரிந்தும் தங்களுக்கு தலைசாய்க்கும் தகுதி அற்ற எதிர்கட்சி தலைவன் வேண்டும் என்பதற்காக இராசம்மந்தன் ஐயாவுக்கு மகுடம் சூட்டி வைத்துள்ளனர் பாராளுமன்ற காலத்தின் பாதி காலம் விரைந்து ஓடி போனாலும் இந்த நாட்டு மக்களின் வாழ்வுக்காக அல்லது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் மீள்குடியேற்றம் பற்றி எதிர்கட்சி தலைவர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளாரா ?


அல்லது நாட்டின் அபிவிருத்தி பற்றி பேசியுள்ளாரா ? அல்லது நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது பேசியுள்ளாரா ? அல்லது சமய கலாச்சாரம் மீறப்படும் போது பேசியுள்ளாரா ? எதுவுமே இல்லை ஆனால் முஸ்லிம்களுக்கு காலி கிந்தோட்டை சம்பவம் அம்பாறை பள்ளிவாசல் மீதான தாக்குதல், கண்டி - திகன, ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாத நிகழ்வுகளுக்கு விலாங்கு மீன் வேஷம் போட்டு பேசினாரே தவிர
J V P தலைவர் அனுர குமார திசாநாயக்கா அவர்கள் இனவாதிகளுக்கு எதிராக பேசிய கருத்துக்களை கூட எதிர்கட்சி தலைவரால் பேச முடியவில்லை .

அதுமட்டுமல்ல தேர்தல் முறைமாற்றம் வந்த போது அதன் பிழையை கூட அரசுக்கு கூறியிருந்தால் உள்ளூராச்சி சபைகளில் ஆட்சி அமைக்க கூட்டு தேடி அலையவேண்டிய நிலை வந்து இருக்காது அடுத்து எதிர்கட்சி தலைவரின் ஊரான திருக்கோணமலையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாச்சார உடையான ஆபாயா உடை அணியக்கூடாது என்று இனவாதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் இது ஒரு கேவலம் கெட்ட செயல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டம் படித்த மேதை சம்மந்தன் ஐயா இதுவரை எதிர்ப்பு அறிக்கை விடவில்லை இவைகளை சிந்தித்தால் இப்படியான எதிர்கட்சி தலைவரால் நாட்டு மக்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை அதனால் மக்கள் நலன் கொண்ட எதிர்கட்சி தலைவர் இந்த நாட்டுக்கு தேவை என்ற குறையோடு பாராளுமன்றம் ஏங்கி நிற்கிறது.
அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மை எமக்கு வேண்டாம்... மக்கள் நலன் கொண்ட எதிர்கட்சி தலைவர் வேண்டும் . அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மை எமக்கு  வேண்டாம்... மக்கள் நலன் கொண்ட எதிர்கட்சி  தலைவர் வேண்டும் . Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.