மலைநாட்டில் தற்போது கடும் மழை... இடி தாக்கத்துக்குள்ளான இருவர் வைத்தியசாலையில்.


ஹட்டன், தலவாக்லை, கினிகத்தேனை, நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில், இன்று (26) மதியம் முதல் கடும் மழை பெய்து வருவதால், இப்பிரதேசத்தில் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளதுடன், இடி தாக்கத்துக்குள்ளான இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் ஒரு மணியில் இருந்து பெய்து வரும் கடும் மழையினால், குறித்த பிரதேச பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹட்டன் பகுதியில் அதிக மழை காணப்படுகின்றமையால், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதி ஆகியவற்றில் பயணிக்கும் வாகன சாரதிகள், மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு, ஹட்டன் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று மாலை 3 மணியளவில், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, டிக்கோயா மணிக்கவத்தை, தோட்டப் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததினால், தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி, டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மலைநாட்டில் தற்போது கடும் மழை... இடி தாக்கத்துக்குள்ளான இருவர் வைத்தியசாலையில். மலைநாட்டில் தற்போது கடும் மழை... இடி தாக்கத்துக்குள்ளான இருவர் வைத்தியசாலையில். Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.