வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு. #ஓட்டமாவடி-எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை வீதியிலுள்ள வீடொன்ரில்
இருந்த பெண்னையும் சிறுமியையும் திடீரென்று வீட்டிக்குல் புகுந்த இனந்தெரியாத மர்ம நபர் அவர்களை பயமுறுத்தி மிரட்டிய சம்பவம் இன்று (15) ம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பகல் உணவை உட்கொண்டுவிட்டு கணவன் வெளியில் சென்ற போது குறித்த பெண்ணும் சிறுமியும் தனிமையில் இருக்கும் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கூக்குரல் விட்டு அழுததால் மர்ம நபர் செய்வதறியாது தப்பிச் செல்வதற்காக அருகிலிருந்த ஆற்றில் குதித்துள்ளார் உடனடியாக அவரை அப் பிரதேச மக்கள் பாதுகாத்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபர் யார் எங்கிருந்து வந்தவர் போன்ற விசாரணைகளை தற்போது வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு. #ஓட்டமாவடி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு. #ஓட்டமாவடி Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5