மலேசியாவில் கொல்லப்பட்ட பலஸ்தீன் கல்வியாளர் ; பின்னணியில் மொஸாத்..??மலேசியாவில் நேற்றுமுன்தினம்  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியான பலஸ்தீன்  நாட்டு
கல்வியாளர் பாஹ்த் அல் பட்ஸின் கொலையின் பின்னனியில் இஸ்ரேல் நாட்டு உளவு பிரிவு மொஸாத் இருப்பதாக பஹ்தியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த பத்து வருடங்களாக மலேசியாவில் பேராசியராக  பணிபுரியும் பாஹ்த் அல் பட்ஸ் அடைப்படையில் ஒரு தேர்ச்சிபெற்ற பொறியியளாலராவர்.

பாலஸ்தீனை சேர்ந்தவரும் ஹமாஸ் போராளிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் உறுப்பினராக இருந்த ஃபாதி அல்-பட்ஷ்  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். 

பலஸ்தீன் கல்விமான்களை இலக்கு வைத்து மொஸாத் முன்னெடுத்துள்ள வேட்டைக்கு இவர் இரையாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த  கொலையுடன் வெளிநாட்டு புலனாய்வு பிரிவை சேர்ந்த நபர்களே இருப்பதாக  மலேசிய பதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் கொல்லப்பட்ட பலஸ்தீன் கல்வியாளர் ; பின்னணியில் மொஸாத்..?? மலேசியாவில் கொல்லப்பட்ட பலஸ்தீன் கல்வியாளர் ; பின்னணியில் மொஸாத்..?? Reviewed by Madawala News on April 22, 2018 Rating: 5