இலங்கை வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசேதனைக்கு உட்படுத்த நடவடிக்கை



வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்பொழுது அவர்களை சுகாதார பரிசோனைக்கு உட்படுத்தும்
வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மலேரியா அற்ற இலங்கை என்ற தொனிப்பொருள் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டவர்களை பொறுத்தவரையில் international organization for migration என்ற அமைப்புடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதன்மூலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களின் தேகஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களை நாம் திருப்பியனுப்புவதற்கு எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசேதனைக்கு உட்படுத்த நடவடிக்கை இலங்கை வரும் வெளிநாட்டவர்களை சுகாதார பரிசேதனைக்கு உட்படுத்த நடவடிக்கை Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.