எகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Egஎகிப்தில் இடம் பெற்ற சர்வதேச குர்ஆன் ஓதுதல் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்ற வாழைச்சேனை
அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு  (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.

முஸ்லீம் கலாசார திணைக்களத்தினால் தேசிய ரீதியில் இடம் பெற்ற குர்ஆன் ஓதுதல் போட்டியில் முதலாம் இடத்தினையும் எகிப்தில் இடம்பெற்ற சர்வதேச போட்டியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று எமது நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்த மௌலவி அல் ஹாபிழ் எம்.ஐ.எம்.இஸ்ஸத்தை பொண்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கியதுடன் பண முடிச்சும் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.


வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் நிறுவாகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எச்.எம்.முஹைதீன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லாஹ், காத்தான்குடி பலாஹ் அரபு கல்லூரியின் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.அலியார், கண்டி ஹக்கானியா அரபு கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.முஹம்மத் ஹாரி, வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய அரபு கல்லூரி தலைவர் எம்.எச். முஹம்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.எகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Eg எகிப்து சர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு. Eg Reviewed by Euro Fashions on April 15, 2018 Rating: 5