இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றிற்கு 1170 மில்லியன் ரூபா நட்டம் ..



பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நாளொன்றுக்கான நட்டம் 39 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை எவ்வாறு நிலவுகின்றதோ அதற்கு ஏற்ப ஒப்பீட்டளவில் இலங்கையிலும் எரிபொருளின் விலையை பேணுவதற்கான விலை சூத்திரமொன்றை தாயாரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம், இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனையொன்றை விதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த வருடத்தின் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியை அவர்கள் இதற்காக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதத்திற்குள் அரசாங்கம் இந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தாயாரிக்காதமையினால் வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த விலை சூத்திரம் தாயாரிக்கபடாது போனால் சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கடன் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் போது அதற்கு குறைவான விலையில் இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமையே இதற்கான காரணமாகும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றிற்கு 1170 மில்லியன் ரூபா நட்டம் ..  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதம் ஒன்றிற்கு  1170 மில்லியன் ரூபா நட்டம் ..  Reviewed by Madawala News on April 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.