இலங்கைக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, அமெரிக்காவின் காங்கிரஸ் அங்கீகாரம்..இந்த வருடத்தில் இலங்கைக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு
சட்டமூலத்தை, அமெரிக்காவின் காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி, ஜனநாயக செயற்பாடுகள் மற்றும் இன, மத மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் எழுச்சி ஆகியவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான நிதி ஆண்டிற்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் ஒதுக்கப்படும் இந்த நிதியை இலங்கை பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தி, நிதி ஒதுக்கீட்டுக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த நிதியைப் பெற முடியும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மோதலுக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளப்படுத்தல், பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், நீதிக்கு மதிப்பளித்து, சிவில் மற்றும் மனித உரிமைகளை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனிதாபிமான செயற்பாடு, அனர்த்த விடயங்களை முன்னெடுத்தல், இராணுவ மறுசீரமைப்பு மற்றும் படையினர் தொகையை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக நான்கு இலட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் பயிற்சி மற்றும் உபரகண விடயங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, அமெரிக்காவின் காங்கிரஸ் அங்கீகாரம்.. இலங்கைக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, அமெரிக்காவின் காங்கிரஸ் அங்கீகாரம்.. Reviewed by Madawala News on April 22, 2018 Rating: 5